Select your location

முறைகேள் அதிகாரி அலுவலகம் (Tamil)

சரியான முறையில் வியாபாரம் செய்தல் 

எமது பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், வழங்குநர்கள் மற்றும் பிற ஈட்டன் (Eaton) நிறுவனப் பங்காளர்கள் ஆகியோர்களிடம், வேலை தொடர்பான கேள்விகள் மற்றும் ஐயங்களுக்கு எப்படி தீர்வு காண்பது என்பதற்கான ஆதாரம் உள்ளது - அது தான் ஈட்டன் (Eaton) நிறுவன முறைகேள் அதிகாரி அலுவலகம்.

சுதந்திரமான மற்றும் நடுநிலையுடைய முறைகேள் அதிகாரிகளோடு செய்கிற, முழுமையான இரகசியத்தன்மையிலானதும் மற்றும் அலுவலக ரீதியில் அல்லாததுமான உரையாடல்கள், ஒரு ஐயத்தின் தன்மை மற்றும் அதன் அளவையும், அதனைத் தீர்த்து வைப்பதற்கான வெவ்வேறு வாய்ப்புகள் குறித்த நன்மை தீமைகளையும், அதனை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கானதோர் வழிமுறையையும் தீர்மானிப்பதற்கு உதவுகிறது. சரியான அறிவிக்கும் வழிமுறை வாயிலாக (லைன் மேனேஜ்மென்ட், மனித வளங்கள் அல்லது ஈட்டன் நிறுவன உலகளாவிய நன்னெறிகள் அலுவலகம் போன்றவை) நடவடிக்கை எடுப்பதற்கான முடிவு, அந்தந்த தனிநபர்கள் வசமே விடப்படுகிறது. வெளிப்படையான அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிற பட்சத்தில் மட்டுமே, முறைகேள் அதிகாரி நடவடிக்கை எடுப்பார்.

ஓம்பட்ஸ்:
 

  • கவலைகளை கவனித்து கேட்பார்
  • தகவல்களை இரகசியமாக பராமரிப்பார்
  • அனைத்து தனிநபர்களுக்கும் பாரபட்சமற்றவராய் இருப்பார்
  • கவலைகளை தெளிவுபடுத்த உதவுவார்
  • தீர்மான விருப்பத்தெரிவுகளை அடையாளம் காண்பதற்கும் மதிப்பிடுவதற்கும் உதவுவார்
  • தகவல்களையும் பயிற்சியையும் வழங்குவார்
  • நேர்மைக்கும், ஈட்டன் மதிப்புகளுக்கும், சட்டத்திற்கும் இணங்குகின்ற  விளைவுகளை நிறைவேற்ற உதவுவார்
  • முறைசாரா நடுநிலைமை செய்வார் மற்றும் சாதுரியத்தை கையாள்வார்
  • முற்பட்ட எச்சரிக்கை அமைப்பாய் செயல்படுவார், பணித்தளப் போக்குகளை அடையாளம் காண்பார்
  • விவகாரங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான மாற்றங்களை அடையாளம் காண்பார்

 

ஓம்பட்ஸ்:

  • இரகசியதன்மையை மீறமாட்டார்
  • ஒருபக்கமாய் நடந்துகொள்ளமாட்டார்
  • முறையான அல்லது ஆழமான விசாரணைகளை மேற்கொள்ளமாட்டார்
  • கொள்கையை தீர்மானிக்கமாட்டார்
  • நிர்வாக முடிவுகளை மேற்கொள்ளமாட்டார்
  • முறையான பாதைகளுக்கு மாற்றாய் செயல்படமாட்டார்